இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 13 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
பதிவு : பிப்ரவரி 10, 2020, 03:07 AM
சேலம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், 13 வயது சிறுமி உள்பட இரண்டு பேர் பலியாகினர்.
சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி துரைசாமி. இவர் தனது 3 வயது மகள் தாரணியை அழைத்துக்கொண்டு, வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள உறவினர் ராஜேந்திரன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கிருந்து, வேப்பிலைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது, வழி காண்பிக்க ராஜேந்திரன்  மகள் சௌமியாவை உடன் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது எதிரே 4 பேருடன் வந்த இருசக்கர வாகனம், எதிர்பாராதவிதமாக துரைசாமியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சௌமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில்  துரைசாமி, அவரின் 3 வயது மகள் தாரணி, மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சுரேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், மற்ற ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர் வீட்டுக்கு வழி காண்பிப்பதற்காக சென்ற பள்ளி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1042 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

61 views

பிற செய்திகள்

ஈரோடு : சர்க்கரை ஆலையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

சர்க்கரை ஆலையை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

0 views

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மராட்டிய கொள்ளையன் கைது

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிர மாநில கொள்ளையன் அமோல் பாலாசாகிப் ஷிண்டே-வை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர்.

0 views

சிஏஏ போராட்டம் - கே.பாலகிருஷ்ணன் நேரில் ஆதரவு

சென்னை வண்ணாரப்பேட்டையில், 4வது நாளாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆதரவு தெரிவித்தார்.

10 views

திருச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி

கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் நடைபெற்றது.

8 views

நகராட்சி அலுவலரை முற்றுகையிட்ட மக்கள் - குடிநீர் வழங்கவில்லை என புகார்

குன்னூரில் ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

5 views

வடுகபட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி - 749 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடுகபட்டி சுருளி ஆண்டவர் கோவில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.