ஃபேஸ்புக்கில் தகவல் தெரிவித்துவிட்டு தாக்குதல் : துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு
பதிவு : பிப்ரவரி 09, 2020, 04:40 AM
தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பொதுமக்கள் மீது ஒருவர் சரமாரியாக துப்பாக்கச்சூடு நடத்தியதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் நகோன் ராட்ச‌சிமா மாகானத்தில் உள்ள  டெர்மினல் என்ற வணிக வளாகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Jakrapanth Thomma என்ற நபர் வணிக வளாகத்தில் புகுந்து  துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அங்குள்ள  குடியிருப்பு பகுதி, ராணுவ முகாம் என பல இடங்களிலும் இவர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.  இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர், அந்த வணிக வளாகத்தில் பதுங்கி இருக்கும் நிலையில்,  உள்ளே நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பதால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.  இந்த தாக்குதலுக்கு முன்பாக அந்த நபர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அனைவருக்கும் இறப்பு தவிர்க்க முடியாத‌து என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வைத்து போலீசார், அந்த நபரின் புகைப்படம் மற்றும் தகவல்களை சேகரித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தாக்குதல், மக்கள் பதுங்கிய காட்சிகள், போலீசாரின் நடவடிக்கைகள் என வெளியாகியுள்ள காட்சிகள், அங்குள்ள பதற்றமான சூழலை வெளிப்படுத்துகின்றன.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

74 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸால் இலங்கையில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

159 views

அமெரிக்கா செல்ல இருக்கும் சொகுசு கப்பலில் 130 பேருக்கு கொரோனா தொற்று

ஆயிரத்து 800 பேரை ஏற்றி கொண்டு அமெரிக்காவின் ஃபிளோரிடா நகருக்கு பயணிக்கு சொகுசு கப்பல் பனாமா துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.

1190 views

பசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்

கொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.

67 views

"பணத்திற்காக சேவை செய்வதாக விமர்சிப்பதா ?" - அமெரிக்காவிற்கு கியூபா மருத்துவர்கள் கண்டனம்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக தங்கள் நாட்டு மருத்துவர்களை அனுப்பி வைத்து வருகிறது கியூபா.

322 views

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தை தனிமைப்படுத்தும் திட்டத்தை கைவிட்ட அதிபர் டிரம்ப்

உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2337 views

அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் - ஓய்வின்றி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்

அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் - ஓய்வின்றி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.