மீனாட்சியம்மன் கோவில் தெப்ப திருவிழா : அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்த அம்மன்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 03:55 AM
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தை மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ விழாவானது, கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவின் உச்ச நிகழ்ச்சியான தெப்ப திருவிழா வழக்கம் போலவே கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தெப்பத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட தேரில் நீர் நிரம்பியுள்ள தெப்பத்தில் இரண்டு முறை வலம்வந்தனர். முன்னதாக, முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளிய சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தெப்பதேரில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மனுக்கு ஓதுவார்கள் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடி பூஜை செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால், ஏராளமான போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

206 views

பிற செய்திகள்

உணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு

144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

6 views

கிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.

4 views

"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

4 views

பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்

சென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.

5 views

"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்

கொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.

2 views

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

330 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.