உபகரணம் வாங்கியதில் முறைகேடு என புகார் - எஸ்.பி. - டி.எஸ்.பி. வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
பதிவு : பிப்ரவரி 08, 2020, 07:41 PM
காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியது தொடர்பான முறைகேட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழக காவல்துறைக்கு சிசிடிவி, லேப்-டாப், வாக்கி-டாக்கி போன்ற உபகரணங்கள் வாங்கிய விவகாரத்தில் 350 கோடி ரூபாய்  ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதற்காக தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகத்தில் தனியாக குழு ஒன்றை அமைத்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக காவல்துறை தொழில் நுட்ப பிரிவில் 2016 முதல் 2019 வரை வேலை பார்த்த காவல்துறை  உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக, 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஏடிஎஸ்பி உதயசங்கர் மற்றும் ரமேஷ் வீட்டிலும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள எஸ்பி அன்புச்செழியன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உபகரணங்கள் வழங்கிய நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

278 views

பிற செய்திகள்

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

0 views

ஊரடங்கை மீறினால் - நடப்பது என்ன ?

ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்தால் என்ன நேரிடும் என்பதை சித்தரித்து காட்டியுள்ள மதி கார்டூனை தற்போது பார்க்கலாம்.

6 views

டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - பாதுகாப்பு பணியில் காவல்துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும், பாதுப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

7 views

பிரதமர் அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வு - "தெரு விளக்குகள் கட்டாயம் ஒளிர வேண்டும்" -மின்வாரியம்

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.

26 views

அத்தியாவசிய பொருட்களை வாங்க நேரம் குறைப்பு - விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர்

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

522 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

342 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.