சபரிமலையில் மகரஜோதி தரிசனம் - ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்
பதிவு : ஜனவரி 15, 2020, 11:20 PM
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ந் தேதி ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐய்யபனுக்கு அபிஷேகமும் , ஆராதனையும் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்ச்சியாக  இன்று மாலை 6.45 மணி அளவில், ஜோதி வடிவாக ஐயப்பன், பொன்னம்பல மேட்டில்  பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்க கூடிய ஆபரணங்கள் சபரிமலையை அடைந்தது. 18 படிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவித்து பூஜைகள் செய்த உடன், ஐயப்பனை ஜோதி வடிவில் பக்தர்கள் தரிசித்தனர். ஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலை , பம்பை , நிலக்கல் , சன்னிதானம் போன்ற இடங்களில் பக்தர்கள் குவிந்திருந்தனர். பாதுகாப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

பிற செய்திகள்

இந்திய விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 11ம் தேதி வரை நீட்டித்த பெரு நாடு

இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, பெரு நாடு அறிவித்துள்ளது.

74 views

பத்மசாம்பவர் பிறந்தநாள் கொண்டாட்டம் - பிரத்யேக ஆடை அணிந்து துறவிகள் நடனம்

யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள ஹெமிஸ் மடாலயத்தில் 2ஆம் புத்தர் என்றழைக்கப்படும் பத்மசாம்பவர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

25 views

சர்வதேச யோகா தினம் - யோகாசனங்கள் செய்த மத்திய அமைச்சர்கள்

"யோகா ஒரு இந்திய பாரம்பரியம்" குடியரசு துணைத் தலைவர் யோகா பயிற்சி - வெங்கையா நாயுடு தன் மனைவியுடன் யோகா

34 views

பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை - முக்கிய தீவிரவாதியும் என்கவுன்ட்டரில் பலி

காஷ்மீரில் லக்‌ஷர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்று உள்ளனர்.

9 views

"மக்களின் நம்பிக்கை கீற்று-யோகா" - பிரதமர் மோடி பெருமிதம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு தன்னம்பிக்கை தர யோகா உதவுவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

9 views

சர்வதேச யோகா தினம் - எல்லையில் இராணுவ வீரர்கள் யோகா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையினர், மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும், எல்லை பாதுகாப்பு படையினர் உறைபனியையும் பொருட்படுத்தாமல் யோகாசனங்களை செய்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.