நிர்பயா பாலியல் கொலை வழக்கு : தூக்கை ரத்து செய்ய முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
பதிவு : ஜனவரி 15, 2020, 09:08 PM
நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்ய முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி முகேஷ்  சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்ய முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி பட்டியாலா நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு தண்டனை உத்தரவுக்கு எதிராக குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திகார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் மெஹ்ரா, ஒரு மரண குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த பின்னர் குற்றவாளிகளுக்கு 14 நாட்கள் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதிக்கு நாங்கள் கட்டுப்பட்டிருப்பதால், நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகுதான் தண்டனையை நிறைவேற்ற  முடியும் என்றார். இதையடுத்து, முகேஷ்சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க  மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு முகேஷ்சிங்கிற்கு அறிவுறுத்தினர்.  

தொடர்புடைய செய்திகள்

"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை

தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்

8 views

பிற செய்திகள்

நூற்பாலையை மூடுமாறு உத்தரவிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை - நாராயணசாமி

புதுச்சேரியில் உள்ள பழமையான நூற்பாலையை மூடுமாறு உத்தரவிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

35 views

ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

129 views

"காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை" - ரவீஷ்குமார்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

31 views

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

52 views

"ராயலசீமாவுக்கு நீங்கள் செய்தது என்ன?" - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம்

ராயலசீமாவுக்கு எதிரான மனநிலைதான் அமராவதியை சந்திரபாபு நாயுடு தலைநகராக்கியதற்கு காரணம் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்த கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

11 views

71-வது குடியரசு தின விழா : டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஒத்திகை

71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பிற்கான கலைநிகழ்ச்சி ஒத்திகை டெல்லியில் களை கட்டியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.