எடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசிய மடாதிபதி - பொது மேடையில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு
பதிவு : ஜனவரி 15, 2020, 02:32 AM
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை பொது மேடையில் மடாதிபதி மிரட்டும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா,  உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா குருஜி, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கா விட்டால், ஒட்டுமொத்த பஞ்சமாஷாலி சமுதாயமும் உங்களை புறக்கணித்து விடும் என முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து மிரட்டல் விடுக்கும் தொனியில்  பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடியூரப்பா, இருக்கையை விட்டு எழுந்து இது போன்று பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதியிடம் கூறினார். ஆனாலும் மடாதிபதி, முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து அமைதியாக இருக்கையில் அமரும்படி மிரட்டல் தொனியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அமைதியான முதலமைச்சர் எடியூரப்பா, மடாதிபதி கூறியதை எல்லாம் செய்ய முடியாது என்றும்,  விண்ணப்பம் வைக்கலாம், தம்மை மிரட்ட முடியாது என்றும் கூறினார். முதலமைச்சர் இருக்கையில் தம்மை அமர வைக்க 17 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார்கள் என்று கூறிய எடியூரப்பா, அவர்களுக்கு துரோகம் இழைக்க முடியாது என்றும் கூறினார். 

பிற செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்

0 views

"அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" - முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்​கை

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

8 views

மார்ச் 24ல் இன்டிகோ 6E -2403 விமானத்தில் பயணித்தவரா நீங்கள்? - 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு

மார்ச் 24-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா I5-765 மற்றும் இன்டிகோ 6E -2403 ஆகிய விமானங்களில் பயணம் செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

5 views

கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்​சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

15 views

"தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார் பீலா ராஜேஷ்" - ப.சிதம்பரம் பாராட்டு

தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

117 views

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.