சிவகங்கை : பாரம்பரிய நெல்வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி
பதிவு : ஜனவரி 11, 2020, 08:57 PM
பாரம்பரிய நெல்வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி ஒருவர் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
பாரம்பரிய நெல் வகைகளுள் ஒன்று சிவப்பு மாப்பிள்ளை சம்பா..

தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை சிவகங்கை மாவட்டத்திலும் அறிமுகம் செய்துள்ளார், வேம்பத்துரை சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன்.

நூற்று 60 நாள் பயிரான சிவப்பு மாப்பிள்ளை சம்பா, ஆறு அடி முதல் ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியது.சர்க்கரை நோயை தடுக்கும் இந்த நெல் வகைக்கு தற்போது அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

இயற்கை உரம் தயாரிக்க கொங்கு மண்டலத்தில் இருந்து காங்கேயம் மாடுகளை வாங்கிய ஸ்ரீதரன், அவற்றின் சாணம், கோமியம் மூலமாக ஜீவாமிர்தம் உரம் தயாரித்து வயல்களில் தூவி வருகிறார்..

ஏக்கர் ஒன்றுக்கு 500 கிலோ மண் புழு போதுமான நிலையில், அதனைவிட அதிகமான மண்புழு உரம் தயாரித்து அவற்றை மோருடன் கலந்து வயலில் தெளித்து வந்துள்ளார், ஸ்ரீதரன். 

இதனால் அறுவடைக்கு இன்னும் 40 நாட்கள் எஞ்சியுள்ள  
நிலையில், தற்போதே ஆறு அடி உயரம் வளர்ந்துள்ள நெல்லின் ஒரு நாற்றில் இருந்து சுமார் 15 முதல் 20 செடிகள் வரை வளர்ந்துள்ளது

இயற்கை உரம் சொந்தமாக தயாரித்து நெல் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் தான் செலவாகும் என்றும் கூறும்  ஸ்ரீதரன், அதனால் ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து மடங்கு வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு, இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

734 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

383 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

137 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

100 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

77 views

பிற செய்திகள்

சுப்ரமணியசாமி கோயில் மூடல் - பூ வியாபாரம் பாதிப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோயில் மூடப்பட்டுள்ளதால் கோவில் முன்பு பூக்கடை நடத்தி வரும் பூ வியாபாரிகள் வருமானம் ஏதுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

3 views

கடலூரில் 1,300 புதிய மருத்துவ படுக்கை வசதி - தயார் நிலையில் முகக் கவசங்கள், கிருமி நாசினி

கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக கடலூரில் 1300 மருத்துவமனை படுக்கைகள் புதியதாக வரவழைக்கப்பட்டுள்ளது.

16 views

5000 வாகனங்கள் பறிமுதல் - 6252 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு மீறல் - போலீசார் அதிரடி

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

15 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு - தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து மக்கள் மரியாதை

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

21 views

"சேலத்தில் புதிய கட்டுப்பாடு - மீறினால் வாகனம் பறிமுதல்"

சேலத்தில் வெளியே செல்லும் வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு இருமுறை மட்டுமே அனுமதி வழங்கும் வகையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.