அதிமுக எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
பதிவு : ஜனவரி 10, 2020, 05:58 PM
அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஆஜராகும்படி தற்போதைய தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை செல்லாது என்று  அறிவிக்க கோரி, அந்த தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிராகரிக்கப்பட்ட102 தபால் வாக்குகளுடன் வரும்  ஜனவரி 20ம் தேதி  நேரில் ஆஜராக காட்டுமன்னார் கோயில் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு முத்துகுமாரசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முத்துகுமாரசுவாமி ஓய்வு பெற்று விட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போதைய தேர்தல் அதிகாரி,  நிராகரிக்கப்பட்ட 106 தபால் வாக்குகளுடன் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

64 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

21 views

பிற செய்திகள்

சென்னையில் சிகிச்சை பெறுவோர் - 23,581 : குணமடைந்து வீடு திரும்பியவர்கள் - 40,111

சென்னையில் தற்போது, கொரோனா நோய்க்கு எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, 15 மண்டலங்களில் மொத்தம் 23 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

42 views

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,076 கனஅடி

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

7 views

"கலைஞரும் இல்லை... ஜெ.அன்பழகனும் இல்லை" - காணொலியில் நா தழுதழுக்க பேசிய ஸ்டாலின்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் விட்ட தாளமுத்து, நடராஜன் தியாகத்தை போன்று ஜெ.அன்பழகனின் மறைவும் வரலாறாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாராம் சூட்டினார்.

1166 views

மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ: பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடல்

மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ பரவிய சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

859 views

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் படத்திறப்பு விழா - திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவ படத்தை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

121 views

கைதான உதவி ஆய்வாளர்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" - மாற்றுத் திறனாளிகள் ஆணையம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான உதவி ஆய்வாளர்கள் ஏற்கனவே மாற்றுத் திறனாளியை தாக்கியதாக புகார் உள்ள நிலையில் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத் திறனாளிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.