சிறை கைதிகள் தயாரித்த "சுதந்திர" சோப்பு : விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட சோப்புகள்
பதிவு : ஜனவரி 10, 2020, 03:42 PM
சுயதொழிலால் தொழில் முனைவராக அவதாரம் எடுக்க இருக்கும் சிறைக்கைதிகள் குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு
திருச்சி மத்தியச் சிறைச்சாலையில், 600 தண்டனை கைதிகள், 800 விசாரணை கைதிகள் என மொத்தம், 1400 கைதிகள் உள்ளனர். கைதிகள் மனம் திருந்தி வாழ்வதற்காக பேக்கரி, உணவகம் போன்ற சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க சிறைத்துறை தவறுவதில்லை இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய சிறையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட புது இயந்திரங்கள் கொண்டு குளியல் சோப்பு மற்றும் சலவை சோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளின் கரங்களால் தயாரிக்கப்பட்ட கிளிசரின்  மற்றும் தேங்காய் எண்ணெய் குளியல் சோப்புகளின் விற்பனையை திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகளை கவரக்கூடிய  பல்வேறு வடிவங்களாலான பல வண்ண பொம்மை சோப்புகளும் அடங்கும்... சந்தனம், எலுமிச்சை, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட நறுமணங்கள் கொண்டு தயாரான குளியல் சோப்பு 16 ரூபாய்க்கும், ஆயில் சோப்புகள் 40 ரூபாய்க்கும், சலவை சோப்புகள் 10 ரூபாய்க்கும், புகைப்படத்துடன் கூடிய பரிசளிப்பு சோப்புகள் நூறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.இதனிடையே, விரைவில் நூறு சதவீதம் இயற்கை முறையிலான சோப்புகளை தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

654 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

311 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

68 views

பிற செய்திகள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய மக்கள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

15 views

ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

18 views

கொரோனா விழிப்புணர்வு : எஸ்.பி.பி பாடலுக்கு நடனமாடும் மாணவி

கொரோனா வைரஸ் குறித்து, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலுக்கு, சிதம்பரத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

40 views

தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்

சென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

9 views

விழுப்புரத்தில் திமுக சார்பில் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் வருவாய் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

39 views

உணவின்றி தவித்தவர்களுக்கு சில மணிநேரத்தில் உதவி பொருட்கள் வழங்கிய அதிகாரிகள்

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உணவின்றி தவித்து வந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சரின் டிவிட்டர் சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.