கூட்டுறவு சங்க முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை : பேரவையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்
பதிவு : ஜனவரி 08, 2020, 06:35 PM
கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணை தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்டதிருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு அறிமுகம் செய்தார். இந்த சட்ட மசோதாவிற்கு திமுக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது. இந்த திருத்த சட்ட மசோதாவில், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணை தலைவர் ஆகியோர் செய்யும் கையாடல், மோசடி மற்றும் தவறான  நடத்தைகளுக்கு கூட்டுறவு சங்க அலுவலர்கள் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல தலைவர், துணை தலைவர் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை இல்லை. எனவே தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு சங்க தலைவரோ, அல்லது துணை தலைவரோ குற்றம் இழைத்ததற்கான சாட்சியம் இருக்கும் பட்சத்தில், அவர்களை ஆறு மாத காலத்துக்கு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம், அதற்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாளை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை

ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை

209 views

ஏழரை - (08.01.2020)

ஏழரை - (08.01.2020)

66 views

(09.01.2020) - அரசியல் ஆயிரம்

(09.01.2020) - அரசியல் ஆயிரம்

42 views

(16.01.2020) வீரரைப் போற்று

(16.01.2020) வீரரைப் போற்று

39 views

(08.01.2020) - அரசியல் ஆயிரம்

(08.01.2020) - அரசியல் ஆயிரம்

32 views

பிற செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

4 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய போதிலும் பலரும் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

44 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6 views

கோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

4 views

ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை" - வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 views

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர் - காயல்பட்டினம் அரசு மருத்துவருக்கு சோதனை

டெல்லி நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.