நீட் தேர்வு : சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம்
பதிவு : ஜனவரி 08, 2020, 04:55 PM
நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நீட்தேர்வு விவகாரத்தை கிளப்பினார். நீட்தேர்வு பிரச்சினைக்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படும் என முதல்வர் கூறியதும் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு அரசு இழைத்தது மாபெரும் துரோகம் எனவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு எதிர்ப்பு என்ற கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும், நீட் தேர்வுக்கான விதையை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி நாட்டில் விதைத்தது காங்கிரஸ்-  திமுக அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை, நீட்தேர்வு தலை காட்டவில்லை என்றும், அந்த விஷயத்தில் அவர் உறுதியாக இருந்ததால் அவரை பாராட்டுகிறேன் என்றார். ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் தான் நீட் தேர்வு வந்ததாகவும், இந்த பிரச்சினைக்கெல்லாம் அரசு தான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பிள்ளையை கிள்ளி விட்டதும் இடையே தொட்டிலை ஆட்டியதும் திமுக, காங்கிரஸ் தான் என கூறியதோடு, 
தும்பை விட்டு வாலை பிடிக்கிறீர்கள் என தெரிவித்தார். மீண்டும் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு வாங்கியதாக தெரிவித்தார். மேலும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை நீட்தேர்வு வரவில்லை என்றும், இதன் பிறகுதான் நீட்தேர்வு வந்திருக்கிறது என்றும், இதற்கு அதிமுக அரசுதான் காரணம் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மீண்டும் பேசிய துரைமுருகன், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்து விட்டு, தற்போது எதிர்ப்பு காட்டுவது போல் அதிமுக செயல்படுகிறது எனவும்,  தும்பை விட்டு வாலை பிடிப்பது நீங்களா? நாங்களா? என கேள்வி எழுப்பினார். இப்படியாக நீட் தேர்வு குறித்து பேரவையில் அதிமுக, திமுக இடையே 20 நிமிடங்களாக காரசாரமான விவாதம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

196 views

பிற செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது - தமிழக அரசு

கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 views

"முதியோர் உதவி தொகை வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

முதியோர் உதவித் தொகையை, இருப்பிடங்களுக்கே சென்று வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 views

வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் மூன்றாம் கட்டத்துக்கு பரவாமல் தடுக்க, நேரக் கட்டுப்பாட்டை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வீட்டு உரிமையாளர்கள் 2 மாதங்கள் வாடகை பெற வேண்டாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

517 views

அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

73 views

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் மோதி விபத்து

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

29 views

அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் - ஸ்டாலின்

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

151 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.