ஒன்றிய கவுன்சிலரை காணவில்லை என புகார் : டி.எஸ்.பியிடம் நேரில் மனு அளித்த ஊர் மக்கள்
பதிவு : ஜனவரி 08, 2020, 07:05 AM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 17வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்முருகன் என்பவரை காணவில்லை என கிராம மக்கள் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 17வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்முருகன் என்பவரை காணவில்லை என கிராம மக்கள் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 19 ஒன்றிய கவுன்சிலர்களில், திமுக கூட்டணி 9லும், அதிமுக கூட்டணி 6லும், சுயேட்சை 4 இடங்களையும் வென்றுள்ளனர். இதில், ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர்கள் தேவை என்பதால், அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இருகட்சிகளும், சுயேட்சைகளை சார்ந்து இருக்கின்றன. இதனிடையே, திமுகவினர் டெம்போ வேனில் அழைத்துச் சென்ற ஒன்றிய கவுன்சிலர்களில், செந்தில்முருகனும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தில்முருகனை காணவில்லை என்றும், அவரை யாரோ கடத்தி உள்ளதாகவும், கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

பிற செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

209 views

அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

123 views

அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு : பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

65 views

"எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் நிதி ஏற்க மறுப்பு" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

60 views

"தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வருகிறது" - பினராயி விஜயன்

தமிழகத்தின் பந்தலூர், கூடலூர் பகுதி மக்கள் சிகிச்சை பெறும் வகையில் கேரள மருத்துவமனைகளில் வசதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

141 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டி அ.தி.மு.க. எம்.பி. பிரார்த்தனை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டி அதிமுக எம்.பி. முகமது ஜான் தனது வீட்டில் மின் விளக்குகளை அணைத்து மெழுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

199 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.