"காவல் உதவி ஆய்வாளருடன் மனைவிக்கு தொடர்பு" - மனைவி மீது கணவன் காவல் ஆணையரிடம் புகார்
பதிவு : ஜனவரி 08, 2020, 06:37 AM
காவல் உதவி ஆய்வாளருடன் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை அபகரிப்பதாக மனைவி மீது கணவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கேகே நகரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், தாம் சவுதி அரேபியாவில் பணியாற்றி, கடந்த 2019 மே மாதம் வீட்டுக்கு திரும்பியதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனது மனைவிக்கும் திருநின்றவூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் அதை பலமுறை தட்டி கேட்பதற்கு காவல் உதவி ஆய்வாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பூங்கா ஒன்றில் தனது மனைவியும் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்ட போது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும் இதனை பார்த்த உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கியதாகவும், எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

29 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

73 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

20 views

"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்

திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

60 views

ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்

திருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.

35 views

65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்

கேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.