"பிரபாகரன் வழி தவறியதால் அனுதாபம் குறைந்தது" - துரைமுருகன் கேள்விக்கு செம்மலை பதில்
பதிவு : ஜனவரி 08, 2020, 02:30 AM
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வழி தவறிய போது தான், அதிமுகவுக்கு அவர் மீது இருந்த அனுதாபம் குறைந்தது என அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில், விடுதலை புலிகளை கைது செய்தும், பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக சென்னை வந்தபோது அவரை அனுமதிக்காமல் தடுத்து விட்டு, தற்போது, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை என திமுக போராடுவதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், போர் என வந்தால் சில உயிர்களை இழக்கத்தான் நேரிடும் என குறிப்பிட்ட அவர், பிரபாகரன் ஒரு தீவிரவாதி என ஜெயலலிதா விமர்சித்ததை சுட்டிக்காட்டி இதற்கு செம்மலையின் பதில் என்ன என கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு பதிலளித்த செம்மலை, பிரபாகரன் நல்ல வழியில் போன போது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆதரித்தார்கள் என குறிப்பிட்ட அவர், வழி தவறிய போது தான், அதிமுகவுக்கு அவர் மீது இருந்த அனுதாபம் குறைந்தது என பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"நெமிலியில் நவீன அரிசி ஆலை" - பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட நெமிலியில் நவீன அரிசி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

293 views

விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் : "அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும்" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தகவல்

அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா, ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார்.

193 views

முல்லைபெரியாறு அணை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்- முதலமைச்சர்

முல்லைபெரியாறு அணை தொடர்பான பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

65 views

"கோழிக்கறியால் கொரோனா பாதிக்காது" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதி

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

61 views

பிற செய்திகள்

நிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

348 views

பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

16 views

பா.ஜ.க. எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கட்சி தலைமை உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார்.

1391 views

செவிலியரை அலைபேசியில் அழைத்த மோடி - கொரோனா நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் செவிலியரை திடீரென தொலைபேசியில் அழைத்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

1053 views

கொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண வரவேற்பு ரத்து

வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த உதயராஜ் மகன் பரணிதரனுக்கும் வியாழக்கிழமை, வேலூரில் திருமணம் நடைபெற்றது.

23 views

"கொரோனாவை தடுக்க ரூ.9000 கோடி தேவை" - நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.