கடலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவில் சர்ச்சை : தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவு
பதிவு : ஜனவரி 08, 2020, 01:24 AM
கடலூரில் ஊராட்சி தலைவர் தேர்தலில் பெயரை மாற்றி, வெற்றி வேட்பாளரை அறிவித்த தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமளங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கான முடிவில் ஜெயலட்சுமி என்பவருக்கு பதிலாக விஜயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றதாக தவறாக அறிவிக்கப்பட்டது. 1370 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவரை வெற்றி பெற்றதாக உதவி தேர்தல் அதிகாரி தவறாக அறிவித்த நிலையில், பின்னர் அந்த தவறை தேர்தல் அதிகாரி சுப்பிரமணியனிடம் கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்து, விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக சான்றிதழை வழங்கி விட்டார். இந்த விவகாரத்தால், கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு பதவியேற்பும் ஒத்தி வைக்கப்பட்டது. 
இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன், தேர்தல் அதிகாரியும் வட்டார வளர்ச்சி அலுவலருமான சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வெற்றி சான்றிதழ் வழங்கும் முன்பே, உதவி தேர்தல் அதிகாரி கூறியதையும் பொருட்படுத்தாமல் சான்றிதழ் வழங்கியது தெரியவந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

32 views

கோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

14 views

"பாராட்டு பெறும் அரசின் நடவடிக்கை" - திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பேச்சு

கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டு பெற்று வருவதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

17 views

பிஎஃப், சிறுசேமிப்பு வட்டி குறைப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

வருங்கால வைப்பு நிதி, மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

324 views

பிரதமர் மோடி பெயரில் போலி வங்கி கணக்கு?

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரதமர் மோடியின் நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

117 views

வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் மூன்றாம் கட்டத்துக்கு பரவாமல் தடுக்க, நேரக் கட்டுப்பாட்டை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வீட்டு உரிமையாளர்கள் 2 மாதங்கள் வாடகை பெற வேண்டாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1530 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.