"ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது" : தர்பார் விழாவில் ரஜினி பேச்சு
பதிவு : டிசம்பர் 08, 2019, 08:07 AM
ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், பல நேரங்களில்  விமர்சித்திருந்தாலும் இசை வெளியீட்டு விழாவிற்கு அரங்கம் தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். 70வது வயதில் காலடி வைக்கும் இந்த ஆண்டின் பிறந்தநாள் தனக்கு முக்கியமான பிறந்தநாள் என்றும்,  தனது பிறந்த நாள் அன்று ஊரில் இருக்க மாட்டேன் என்றும், அன்றைக்கு ஏழை அநாதைகளுக்கு ரசிகர்கள் உதவ வேண்டும் என்றும் ரஜினி தெரிவித்தார்  தனது  அண்ணன் தன்னை படிக்கச் சொல்லி
வற்புறுத்தியதாகவும், ஆனால், விருப்பம் இல்லாமல் பணக்கார மாணவர்களோடு சேர்ந்து ஊரை சுற்றுவது , படம் பார்ப்பது என்று இருந்ததாகவும் ரஜினி நினைவுகூர்ந்தார்.  160 ரூபாய் கடன் வாங்கி அண்ணன் தேர்வு கட்டணம் செலுத்திய சூழலில் தேர்வெழுதினால் தேர்ச்சி அடைய மாட்டேன் என்பதால் வீட்டிற்கு தெரியாமல் தமிழ்நாட்டிற்கு ரயில் ஏறி புறப்பட்டதாகவும் ரஜினி குறிப்பிட்டார். ரயிலில் வந்து சென்னையில் இறங்கியபோது பயணச் சீட்டை தொலைத்து விட்டதாகவும், பரிசோதகர் அபராதம் கேட்டபோது கூலித் தொழிலாளர்கள் சிலர் தனக்கு உதவ முன்வந்ததாகவும் ரஜினி தெரிவித்தார். இருந்தாலும் பரிசோதகர் தன்னிடம் இருந்த பணத்தை பார்த்த பிறகு  நம்பிக்கை வந்து  அபராதம் வாங்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கலைஞானம் தன் மீது நம்பிக்கை வைத்து கதாநாயகனாக்கினார், அவர் நம்பிக்கை வீண் போகவில்லை என்றும், ரசிகர்கள்  தன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 16 வயதினிலே பரட்டை கதாபாத்திரம்தான் தன்னை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். 
கோடம்பாக்கம் சாலையில் அயல்நாட்டு காரில் கால்மேல் கால்போட்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும்,  இத்தாலிய வாகனத்தை வாங்கி , அயல்நாட்டு ஓட்டுநரை ஓட்ட வைத்து நேராக கோடம்பாக்கம் சென்றதாகவும் ரஜினி தெரிவித்தார். தன்னை தயாரிப்பாளர் ஒருவர் அவமதித்த இடத்தில் தனது காரை நிறுத்தி் சிகரெட்டை பற்ற வைத்ததாக குறிப்பிட்ட ரஜினி, நாம் வாழ்வில்  வெற்றியடைய  நேரம், காலம்,  சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவை முக்கியம் என்றார். அரசியல் , ஊடகம் , சமூக வலைதளம் என அனைத்திலும் எதிர்மறை வசனங்கள் அதிகமாகி விட்டது என்று குறிப்பிட்ட ரஜினி, அன்பு செலுத்துவோம் , சந்தோசமாக இருப்போம் என்று கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

731 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

379 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

99 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

77 views

பிற செய்திகள்

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதி அறிவிப்பு

கொரோனா நிவாரணமாக, 3 கோடி ரூபாய் வழங்குவதாக நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

82 views

நடிகர் மோகன்லால் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, பிரபல நடிகர் மோகன்லால் 50 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.

49 views

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும் - திரைப்பிரபலங்களுக்கு பூச்சி முருகன் கோரிக்கை

ஊரடங்கால் தொழில் இழந்திருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ திரைப்பிரபலங்கள் முன்வரவேண்டும் என நடிகர் பூச்சி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

33 views

மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

109 views

உலக சுகாதார தினம் - சரத்குமார் வெளியிட்ட வீடியோ

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

454 views

கொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.

882 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.