ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
பதிவு : டிசம்பர் 04, 2019, 12:34 PM
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு  தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த  வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு  ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில்  ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு ஏற்கப்படுவதாகவும், 2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் தொகையாக செலுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு  செல்லக் கூடாது எனவு​ம் பானுமதி அமர்வு நிபந்தனை விதித்துள்ளது. இதுதவிர, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது - அறிக்கை விடக்கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.  சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ கூடாது என்றும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2113 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

146 views

பிற செய்திகள்

வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு

வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 views

தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் : சென்னை மாநகராட்சியை எதிர்த்து வழக்கு

தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி மறுக்கும் சென்னை மாநகராட்சி சட்ட திருத்தத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

3 views

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கந்தமங்கலம் பகுதியை சோந்த மகாராஜா என்ற கூலி தொழிலாளி , அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

3 views

ஈரோடு : லக்காபுரம் கந்தூரி விழாவில் கூட்டு பிரார்த்தனை

தமிழகத்தில் மழைகாலங்களில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையவும், உலக நன்மைக்காக வேண்டி ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் நடைபெற்ற கந்தூரி விழாவில் கூட்டுப்பிரார்தனை நடத்தப்பட்டது.

6 views

ரோப்கார் பணி - பிரான்ஸ் நாட்டு நிபுணர்கள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு இரண்டாவது ரோப்கார் அமைக்கும் திட்டமிடப்பட்டு, 73கோடியே 83லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரான்ஸ் நாட்டைசேர்ந்த போமா என்ற நிறுவனம் இந்த பணியை மேற்கொண்டுவருகிறது.

6 views

எகிப்து வெங்காயம் இறக்குமதி எதிரொலி : கிலோ ரூ.130-க்கு விற்பனை

கோவை மார்க்கெட்டுக்கு, எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.