நடிகை ஜெயஸ்ரீ காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
பதிவு : டிசம்பர் 03, 2019, 03:20 PM
நடிகை ஜெயஸ்ரீ தமக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நடிகை ஜெயஸ்ரீ தமக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னத்திரை நடிகரான ஈஸ்வரை கைது செய்தனர். இந்நிலையில் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக நடிகை ஜெயஸ்ரீ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபட்டதாகவும் ஜெயஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். தன்னிடமிருந்து அபகரித்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மீட்டுத் தரவும் நடிகை ஜெயஸ்ரீ கோரிக்கை விடுத்துள்ளார். 

பிற செய்திகள்

மெரினாவில் சமதள பாதையை நிரந்தரமாக்க மனு : அரசும், மாநகராட்சியும் ஒருவாரத்தில் பதிலளிக்க உத்தரவு

மெரினா கடற்கரைக்கு செல்லும் தற்காலிக சமதள பாதையை நிரந்தரமாக்குவது குறிதது, தமிழக அரசும், மாநகராட்சியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

39 views

யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஆசியன் யோகா போட்டியில், சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய 9 வீரர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

11 views

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தொடர் மழையால் நிறுத்தப்பட்ட, ஊட்டி, மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

8 views

பெரு நாட்டி​ல் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

கடந்த வாரம் இறுதியில் பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல இடிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

12 views

"தமிழகத்தில் தொழில் தொடங்க பொற்காலம் நிலவுகிறது" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்

புதிய தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு வழங்க தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தயாராக உள்ளது துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

31 views

நாளை மறுநாள் இங்கிலாந்து பொதுத் தேர்தல் : கருத்து கணிப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் மீண்டும் பிரெக்ஸிட் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.