"விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு" - நாசா
பதிவு : டிசம்பர் 03, 2019, 07:43 AM
நிலவில் தரையிறங்கும் போது விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா அறிவித்துள்ளது.
நிலவை ஆராய இஸ்ரோ 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய  சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான் -2 விண்கலம் ஆகஸ்ட் 14-ம் தேதி நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கிபடிப்படியாக நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது. சந்திரயான்-2  ஆர்பிட்டரிலிருந்து தனியாக பிரிந்த  விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் நிகழ்வை 
உலகமே உற்று நோக்கியது. 

கடந்த செப்டம்பர் 7 ந்தேதி அதிகாலை நிலவில் தரையிறங்கும் போது  2.1 கிலோமீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டருடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது.  அதை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.  விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்நிலையில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. அது தொடர்பான புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா, விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் சிதறி கிடக்கும் விவரங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2351 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

202 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது" - காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

0 views

குடியுரிமை சட்ட திருத்த மசோதா : திமுக எம்பி திருச்சி சிவா கடும் எதிர்ப்பு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திமுக எதிர்ப்பதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

4 views

விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 48

இந்தியாவின் ரிசாட் 2 பிஆர் 1 செயற்கை கோள் உட்பட 10 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டது.

7 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

10 views

"452 மரங்களை வெட்டலாம்"- வடக்கு ரயில்வே-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி- மதுரா இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்காக, 452 மரங்களை வெட்ட வடக்கு ரயில்வே-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

23 views

பீகார் மாநிலம் கயாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட பாதுகாப்புத்துறை முடிவு

பீகார் மாநிலம் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.