100 நாட்களை கடந்து திகார் சிறையில் ப.சிதம்பரம் : சக கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை
பதிவு : டிசம்பர் 01, 2019, 04:45 AM
திகார் சிறையில் சக கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை ப. சிதம்பரம் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் . 74 வயதானஅவர் ,ஆசியாவின் மிகப் பெரிய சிறையான தில்லி  திகார் சிறையில் செப்டம்பர் 6-ஆம் தேதி அடைக்கப்பட்டு 100 நாட்கள் கடந்து விட்டது .
இந்நிலையில், திகார் சிறை வளாகத்தில் உள்ள 7  ஆம் எண் சிறையில் 15-க்கு 10-க்கு அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஓய்வுநேரத்தில் புத்தகங்களையும், நாளேடுகளையும் வாசித்து வருவதுடன்.  நாட்குறிப்பையும் எழுதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் சக கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகளையும் அவர்  வழங்கி வருவதாக திகார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறை அதிகாரிகளுடனும், காவலர்களுடன் அவர் ,  எளிமையாக பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கைதிகள், சிறை அதிகாரிகளுடனான உரையாடலின்போது, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சியின்மை, வேலையின்மை உள்ளிட்டவை குறித்து கவலை தெரிவிக்கும் அவரது வாதங்களும் கேட்போரை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளன என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதுகு வலி, எடை குறைவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ப. சிதம்பரத்தை, திகார் சிறையில் உள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அவரை பரிசோதித்து, கவனித்து கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1809 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

294 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

29 views

பிற செய்திகள்

இந்திய அளவிலான சிறந்த 10 காவல் நிலையங்கள் - தேனி மகளிர் காவல்நிலையத்திற்கு 4வது இடம்

இந்திய அளவிலான சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி மகளிர் காவல்நிலையத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

35 views

அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா - பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் பவனி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கிய நடைபெற்று வருகிறது.

16 views

கடற்கரையை சுத்தம் செய்த சி.ஆர்.பி. எப். வீரர்கள் - தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேவைப்பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர்.

11 views

சாலையில் கிடந்த நகை பையை போலீஸில் ஒப்படைத்த காவலர் - நேர்மை காவலருக்கு குவியும் பாராட்டு

சாலையில் கிடந்த நகை பையை போலீஸில் ஒப்படைத்த காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்

57 views

"கொள்ளை நடந்த 20 நாட்களில் திருடர்கள் கைது": கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு

காரைக்குடியில், தொழில் அதிபர் வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 20 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்

13 views

சென்னை தரமணியில் கஞ்சா விற்ற இருவர் கைது

சென்னை தரமணியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.