இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
பதிவு : நவம்பர் 29, 2019, 03:20 PM
இலங்கை அதிபரான பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில், அதிபராக கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து அவரை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி சார்பில் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, மூன்று நாள் பயணமாக இந்திய வந்துள்ள கோத்தபய ராஜபக்ச இன்று, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கைகுலுக்கி வரவேற்றனர். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்பை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கோத்தபய ராஜபக்ச ஏற்றார். இருதரப்பு அதிகாரிகளின் அறிமுகம் முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய, தமக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அதிபரான பின் தமது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளதாக கூறிய அவர், இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வலுப்படவும், நாட்டின் பாதுகாப்புக்காவும் உழைக்க உள்ளதாகவும் கூறினார்.   
==

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1955 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

424 views

பிற செய்திகள்

2030ல் இங்கிலாந்தில் கால்பந்து போட்டி நடத்த ஏற்பாடு

அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், 2030 ஆம் ஆண்டுக்கான உலக கால்பந்து போட்டியை இங்கிலாந்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது உறுதி என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

8 views

ஈராக்கில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி

கடந்த இரண்டு மாதங்களாக வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி, ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

28 views

சீனா: ஒரே ராக்கெட்டில் 6 செயற்கை கோள்கள் அனுப்பி சாதனை

சீன அரசு ஒரே ராக்கெட்டில் ஆறு செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.

51 views

சிறுமி கை கொடுத்ததை கவனிக்காமல் சென்ற இளவரசர் - சிறுமியின் வீட்டிற்கு சென்று மகிழ்வித்த அபுதாபி இளவரசர்

அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் மனிதாபிமானமிக்க செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.

1738 views

நைஜீரிய கப்பலுடன் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் - கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்களை மீட்பது குறித்து நைஜீரிய அரசோடு பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

17 views

சூடான் தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உயிரிழப்பு

சூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.