ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம்
பதிவு : நவம்பர் 10, 2019, 05:34 PM
மாற்றம் : நவம்பர் 10, 2019, 05:37 PM
ஆசிரியர்களுக்கான பணி இடமாற்ற கலந்தாய்வு நாளை துவங்குகிறது.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை துவங்கி இம்மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இதற்காக, 688 பெயர் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில், 550 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதேபோல நாளை மறுநாள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 353 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களும் புறக்கணிக்கப்படாமல், தகுதி வாய்ந்தவர்களை முன்னுரிமை பட்டியலில் சேர்த்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

399 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

296 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

91 views

பிற செய்திகள்

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அன்புமணி

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

6 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 views

சென்னை : மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

கள்ளக்காதலர்களுக்கு நகையை கொடுத்து விட்டு, பாலியல் வன்கொடுமை செய்து நகையை பறித்து விட்டதாக கூறிய திருமணமான பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

42 views

மாஞ்சா நூல் கழுத்தறுத்து சிறுவன் பலி எதிரொலி : மாஞ்சா நூல்களை கண்டறிந்து அகற்றும் போலீஸார்

சென்னை ஆர்.கே.நகரில் மாஞ்சா நூல்களை அகற்றும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

8 views

இடஒதுக்கீடு பலன் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

இடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

59 views

சபரிமலை - விரதம் தொடங்கிய பக்தர்கள்

கார்த்திகை மாத முதல்நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.