மேற்குவங்கத்தில் 120 கி.மீ. வேகத்தில் சுழன்றடித்த புயல்
பதிவு : நவம்பர் 10, 2019, 03:43 PM
மேற்குவங்கத்தை அசுர வேகத்தில் தாக்கிய புல்புல் புயல், இரவு பதினொன்றரை மணி அளவில், கரையை கடந்தது.
மேற்குவங்கத்தை அசுர வேகத்தில் தாக்கிய புல்புல் புயல், இரவு பதினொன்றரை மணி அளவில், கரையை கடந்தது. இரவு 8 மணி அளவில் சாகர் தீவு பகுதியில் நிலப்பகுதியை தொட்ட புயல், பலமாக தாக்கியது. கனமழையும், காற்றுமாக சுந்தர்பான் பகுதியில் மையம் கொண்டு தாக்கியது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வீசிய சூறைக்காற்றில், வீட்டின் கூரைகள் பறந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. இரண்டரை மணி நேரம் நங்கூரம் இட்டதை போல், மிரட்டிய புல்புல் புயல், தான்ஜி வனப்பகுதியையொட்டி கரையை கடந்தது. புயல் மற்றும் கனமழை காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடங்கியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.    

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

407 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

311 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

96 views

பிற செய்திகள்

வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும், முடித்துக் கொள்ள கூடாது - தமிழிசை

வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர முடித்துக் கொள்ள கூடாது என மாணவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.

7 views

"சாஸ்திர முறைப்படி அயோத்தியில் ராமர் கோயில்" : கட்டிட கலை நிபுணர் சந்த்ரகாந்த் சோம்புரா தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சாஸ்திர முறைப்படியான வரைப்படம் தயாராகியுள்ளது.

102 views

கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், மோடி

இலங்கை அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

32 views

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நாளை பதவி ஏற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார்.

48 views

அயோத்தி வழக்கு - தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

3 views

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை ஆந்திரா சென்றது எப்படி?

தமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி சேலைகள், ஆந்திராவில் ஜோராக விற்பனை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.