அயோத்தி வழக்கு தீர்ப்பு : நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
பதிவு : நவம்பர் 09, 2019, 07:29 AM
அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில் நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு வரும் 11 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தின் அலிகார் நகரில் மொபைல் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்க மற்றும் ஆட்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன், ஹரித்துவார்,  உத்தம் சிங் நகர் மற்றும் நைனிடால் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள போலீசார் முழு  உஷார் நிலையில் இருக்க  அம்மாநில காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.ஜம்முவில் உள்ள பத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவும் அமலுக்கு வந்துள்ளது.மும்பை மாநகரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அ​னைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்,  சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், மதுக்கடைகள் மூடப்படும் எனவும் மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.ஐதராபாத் நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் அஞ்சனி குமார் தெரிவித்துள்ளார். தேவையான இடங்களில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்பிற செய்திகள்

கொரோனா மரணம் - கொடியது

புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவர் உடலை சவக்குழியில் தூக்கி வீசும் அவலம்

11 views

"பங்கு விற்பனை தொடர்பாக அமேசானுடன் பேச்சு நடத்தவில்லை" - பார்தி ஏர்டெல் நிறுவனம் விளக்கம்

15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை பார்தி ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது.

9 views

இந்தியா Vs சீனா - மோதல் முதல் பேச்சுவார்த்தை வரை...

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

307 views

"சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு" - முதலமைச்சர் பினராயி விஜயன்

ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

65 views

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

54 views

கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

165 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.