இரிடியம் தருவதாக கூறி பலரிடம் பணம், நகை மோசடி: 10 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கொடூரம்
பதிவு : நவம்பர் 07, 2019, 02:07 PM
ஆந்திர மாநிலத்தில் சக்தி வாய்ந்த இரிடியம் தருவதாக கூறி சொந்த பாட்டி உட்பட 10 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூர் என்டிஆர் காலனியை சேர்ந்தவர் சிம்மாத்திரி என்கிற சிவா. ஆரம்ப காலத்தில் 
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவருக்கு  நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடனாளியான சிவா , பிழைக்க வழியில்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாட்ச் மேனாக வேலை செய்து வந்துள்ளார். 
தனக்கு  சில அபூர்வ சக்திகள் இருப்பதாகவும், அதன் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறிய சிவா, பணம், தங்கம் கொடுத்தால் சக்தி வாய்ந்த இரிடியம் கொடுப்பதாக பலரை நம்ப வைத்து 
ஏமாற்றி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சிவா,  தனது பாட்டி உள்ளிட்ட மூன்று பெண்கள் மற்றும் 7 ஆண்களிடம் பணம், நகைகளை பறித்து  அவர்களுக்கு சயனைடு கலந்த பிரசாதத்தை கொடுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஏழூரை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் 2 லட்ச ரூபாய்  மற்றும் நகைகளை சிவா, அபகரித்து கொண்டு, செல்வம், புகழ் கிடைக்கும் என்று கூறி சயனைடு கலந்த பிரசாதம் மற்றும் தங்க நாணயத்தை கொடுத்துள்ளார். சயனைடு பிரசாததத்தை  சாப்பிட்ட  நாகராஜ் திடீரென உயிரிழந்ததால் சந்தேகமடைந்த  உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.நாகராஜ் உடலை  உடற்கூறு ஆய்வு செய்ததில், அவர் சயனைடால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்த போது  கடைசியாக சிவாவுடன் பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் சிவாவை பிடித்து விசாரித்த போது 10 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்து அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. சிவாவை கைது செய்த போலீசார், சயனைடு கொடுத்து வந்த  ஷேக் அப்துல்லா என்பவையும் கைது செய்தனர். சிவாவிடமிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ,30 கிராம் தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமி கொலை:காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் சிறுமியின் சடலம்

ஆந்திர மாநிலத்தில் பெற்றோருடன் திருமணத்திற்கு சென்ற ஆறு வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29 views

பிற செய்திகள்

டிராக்டர் ஓட்​டிய முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிராக்டர் ஓட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

22 views

ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

34 views

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி : உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதில் ஆளுநரை குற்றஞ்சாட்டுவது தவறு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

45 views

ஜனாதிபதியை சந்திக்கும் ஓசூர் பள்ளி மாணவர்கள்

குழந்தைகள் தினவிழாவையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் இன்று சந்திக்க உள்ளனர்.

15 views

"அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா" : அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

32 views

ஆங்கில மொழி மூலம் அறிவு வளருமா? - கல்வியாளர்களின் கருத்து என்ன? ஆந்திரா அரசின் முடிவால் பெற்றோர் குழப்பம்

தாய்மொழி வழி கல்வி சிறந்ததா? - ஆந்திரா அரசின் முடிவால் பெற்றோர் குழப்பம்...

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.