கர்தார்பூர் சாலை வரும் 9-ம் தேதி திறப்பு:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார்
பதிவு : நவம்பர் 07, 2019, 07:29 AM
மாற்றம் : நவம்பர் 07, 2019, 01:59 PM
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 150-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கர்தார்பூர் சாலை வரும் 9-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நோர்வல் மாவட்டத்தில் கர்தார்பூரில் சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. இங்கு தான் சீக்கியர்களின் குருவான குரு நானக்கின் நினைவிடம் உள்ளது. இந்தியாவின் பஞ்சாப்பிலிருந்து சீக்கிய பக்தர்கள் கர்தார்பூர் சென்று  வழிபடுவது வழக்கம். 
அதன்படி குர்தாஸ்பூரில் இருந்து கர்தார்பூருக்கு செல்வதற்கு 4 புள்ளி 3 கிலோ மீட்டர் துாரத்துக்கு சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்  இந்தியாவும் - பாகிஸ்தானும் தங்கள் நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையை அமைத்துள்ளன. இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் தலா  ஆயிரத்து 400 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் தான் இந்த சாலை வழியாக கர்தார்பூருக்கு செல்ல முடியும் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் நீண்ட இழுபறிக்கு பின் இந்தியா கையெழுத்திட்டது. 

பிற செய்திகள்

"தன் மீதான விசாரணை - அமெரிக்காவிற்கே அவமானம்" - அதிபர் டிரம்ப் கருத்து

தன் மீதான விசாரணை, அமெரிக்காவிற்கே அவமானம் மற்றும் சங்கடம் என டிரம்ப் தெரிவித்தார்.

5 views

ஆர்வத்துடன் குத்துச்சண்டை செய்த இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சிமையத்தை, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார்.

11 views

மீண்டும் சுதந்திரா கட்சி தலைவர் ஆனார் சிறிசேன

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

14 views

இலங்கை அதிபர் கோத்தபய உடன் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் சந்திப்பு

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

42 views

"இலங்கை அதிபர் அரசை விமர்சிக்க வேண்டாம்" - தமிழக தலைவர்களுக்கு நாமல் ராஜபக்சே வேண்டுகோள்

இலங்கை தமிழர்களை பற்றி தமிழக தலைவர்கள் சிந்திப்பது நல்லது என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

137 views

"இந்தியாவில் இருந்து தபால் சேவை மீண்டும் துவக்கம்" - பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து தபால் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.