மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை - சரத்பவார்
பதிவு : நவம்பர் 06, 2019, 02:57 PM
மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுக்க, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மக்கள் தங்களுக்கு அந்த  வாய்ப்பை தான் அளித்துள்ளதாகவும், மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவதை தடுக்க, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி விரைவில் அமைய வேண்டும் என்றும், அதற்கு தான் மக்கள் வாக்களித்து உள்ளதாகவும் சரத்பவார் தெரிவித்துள்ளார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சொல்வத போல, அக்கட்சி அமைக்கும் கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்கிருந்து வரும் என்றும் கேள்வி எழுப்பிய சரத்பவார், தமக்கு மீண்டும் மாநில முதலமைச்சராக விருப்பம் இல்லை என தெரிவித்தார். மேலும் வெளியில் இருந்து எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் திட்டம் இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து சோனியா காந்தியிடம் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பு

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரியை, இன்று பிற்பகல் 2 மணிக்கு பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

342 views

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி போட்டியால் பாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது.

173 views

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார்? : இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம்

சரத்பவார் பின்வாங்கியதை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

38 views

"மாநில அரசியலுக்கு திரும்பும் திட்டமில்லை" : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி விளக்கம்

மகாராஷ்டிர அரசியலுக்கு திரும்பு பேச்சுக்கே இடமில்லை என்றும், டெல்லியிலேயே தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

19 views

பிற செய்திகள்

"எதிர்க்கட்சிகைளை வசைபாடும் போது கண்ணியம் தேவை" : ஜெகன்மோகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு அட்வைஸ்

விஜயவாடா பகுதியில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

22 views

"டுவிட்டர் பதிவை நீக்காவிட்டால் போராட்டம்" - அமைச்சர் பாண்டியராஜன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் ட்விட்டர் பதிவை நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

19460 views

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி : உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதில் ஆளுநரை குற்றஞ்சாட்டுவது தவறு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

53 views

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையர் தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.

194 views

காவல்துறை உபகரண ஊழல் - ஸ்டாலின் கண்டனம்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து, தண்டனை பெற்று த‌ர வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

9 views

"உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்" - திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் தலித் பழங்குடி மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.