காற்று மாசு கட்டுப்படுத்த நடவடிக்கை : நவ.4 முதல் நவ.15 வரை அமலுக்கு வருகிறது
பதிவு : அக்டோபர் 13, 2019, 12:38 AM
காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டம் வரும் நவம்பர் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை அமலுக்கு வரவுள்ளது.
டெல்லியில் காற்று மாசு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், டெல்லியை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள், விளைச்சலுக்கு பின்னர்  வயல்வெளிகளில் உள்ள வைக்கோல் உள்ளிட்டவைகளை தீ வைத்து கொளுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் டெல்லியைச் சுற்றிலும் காற்று மாசுபடத் தொடங்கியுள்ளது. இதனைத் தடுக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அரசு ஒற்றை, இரட்டை இலக்க வாகன எண் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியது. 
அது  நல்ல பலன் தந்த நிலையில், தற்போது மீண்டும் அந்தத் திட்டத்தை நவம்பர் 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை செயல்படுத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பெண்களுக்கு மட்டும்  இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் சி.என்.ஜி. வாகனங்களுக்கு விலக்கு இல்லை என்றும், இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11634 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

275 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

115 views

பிற செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படியை 17 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6 views

"ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி" - அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

13 views

புதுச்சேரியில் களைகட்டும் இடைத்தேர்தல் பிரசாரம்...

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.

20 views

பட்டினி நாடுகள் குறியீடு : "112-வது இடத்தில் இந்தியா" - ப.சிதம்பரம் தகவல்

பட்டினி நாடுகள் குறித்த குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா 112-வது இடத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

343 views

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைப்பு- மோடி பிரசாரம்

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்

36 views

கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக சோதனை - ரூ.9 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் பறிமுதல்

வரித்துறை அதிகாரிகளிள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி குவித்துள்ளதற்கான ஆதாரம் சிக்கியதாக கூறப்படுகிறது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.