சென்னை வந்த சீன அதிபருக்கு வரவேற்பு : சீன அதிபரை வரவேற்ற ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி
பதிவு : அக்டோபர் 12, 2019, 01:00 AM
சென்னை வந்த சீன அதிபருக்கு வரவேற்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்தியா, சீனா இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் ஏற்கனவே பல்வேறு இடங்களில் சந்தித்துள்ள நிலையில், சென்னையை அடுத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரான மாமல்லபுரத்தில் மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை பகல் 2 மணி அளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஜி ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வரவேற்புக்கு பிறகு, பிரத்யேக காரான 'ஹாங்கி 5 எல்' ரக காரில், கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு  ஜி ஜின் பிங் புறப்பட்டுச் சென்றார். வழி நெடுகிலும் பள்ளி மாணவிகள் மற்றும் சென்னையில் வாழும் சீனர்கள் அவரை வரவேற்றனர். சென்னை ஓட்டலில் சுமார் 2 மணி நேரம் ஓய்வெடுத்த ஜின்பிங், மாலை 4 மணி அளவில், சாலை மார்க்கமாக மாமல்லபுரம் சென்றார்.  


தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11387 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

208 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

183 views

பிற செய்திகள்

கருணாநிதி அருங்காட்சியகத்திற்கு ரூ.1லட்சம் நிதி - ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

26 views

"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.

7 views

"நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி வரும் அதிமுக" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை அதிமுகவினர் கூறி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

29 views

தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்த வழக்கு : வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி மனு

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி, கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சந்தான குமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

141 views

பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

230 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.