சொத்துக்காக 6 பேரை கொன்ற கேரள பெண் - விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
பதிவு : அக்டோபர் 10, 2019, 02:07 PM
கேரளாவில் தொடர் கொலை வழக்கில் கைதாகியுள்ள பெண் ஜோலி, மேலும் பலரை கொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயி கிராமத்தில், சொத்திற்காகவும், விரும்பிய நபரை திருமணம் செய்யவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த இந்த வழக்கில் கொலையாளி ஜோலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜோலியை 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீஸ் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, கொலையாளி ஜோலியிடம் நடத்திய விசாரணையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆறு பேரை கொன்ற அந்த பெண், மேலும் 5 பெண்கள் உள்பட பலரை கொல்ல திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் இறந்தவர்களின் உறவினர்களான வின்சென்ட், சுனீஷ் டொமினிக் ஆகிய இருவர் மரணத்திலும் ஜோலிக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இவரின் கொலை திட்டங்களுக்கான காரணம் தெரியாமல் போலீஸ் குழம்பியுள்ளனர். தோண்ட தோண்ட நீளும் ஜோலியின் கொலை பட்டியல் கேரள காவல்துறையை அதிர வைத்துள்ளது. ஜோலியை கேரள போலீஸ், காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில், கொலை சம்பவத்தில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரியும்...

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11510 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

106 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

68 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

51 views

பிற செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் வரும் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

5 views

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் மகள் சஃபியா ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

14 views

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பலத்த பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

21 views

"எதிர்மறை சிந்தனையுடன் காங்கிரஸ் தலைவர்கள்" - பிரதமர் மோடி கடும் தாக்கு

ரபேல் விமானத்தின் வருகையால், இந்தியா மகிழ்ச்சியில் இருக்கும்போது, காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் எதிர்மறை சிந்தனையுடன் இருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

19 views

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம்

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

12 views

மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது மை வீச்சு...

பாட்னா அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை பார்க்க சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது, மை வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.