"காங்கிரஸ் தள்ளாடுகிறது" - சல்மான் குர்ஷித் வேதனை
பதிவு : அக்டோபர் 09, 2019, 07:46 AM
கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதால், காங்கிரஸ் தள்ளாடுவதாக மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதால், காங்கிரஸ் தள்ளாடுவதாக மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு, வரும், 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான, சல்மான் குர்ஷித், மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அனைவரும் இணைந்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதால், கட்சி தற்போது தள்ளாடுவதாகவும், கட்சித் தலைவராக சோனியா பொறுப்பேற்றாலும், இடைக்கால ஏற்பாடு என்ற மனஓட்டத்திலேயே அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சட்டசபை தேர்தல் நடக்கும், மஹாராஷ்டிரா, ஹரியானாவில், கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில், இந்த மாநிலங்களில் வெற்றி மற்றும் கட்சியின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11634 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

275 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

115 views

பிற செய்திகள்

"டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் உறுதி" - தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் அறிவிப்பு

டிசம்பர் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடத்தி முடிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

7 views

புதுச்சேரியில் களைகட்டும் இடைத்தேர்தல் பிரசாரம்...

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.

22 views

பட்டினி நாடுகள் குறியீடு : "112-வது இடத்தில் இந்தியா" - ப.சிதம்பரம் தகவல்

பட்டினி நாடுகள் குறித்த குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா 112-வது இடத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

343 views

கம்யூனிஸ்ட் கட்சி 100ஆம் ஆண்டு கொண்டாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி,சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று காலை நடந்தது.

16 views

அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய அ.தி.மு.க. எதிர்ப்பு

அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது தொடர்பான விசாரணை, இந்திய தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது.

21 views

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைப்பு- மோடி பிரசாரம்

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.