சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு : திபெத்திய போராட்டக்குழு தலைவர் சென்னையில் கைது
பதிவு : அக்டோபர் 09, 2019, 03:28 AM
சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இருந்த திபெத்திய போராட்டக்குழு தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையேயான சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உளவுத்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 8 திபெத்திய மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில், போராட்டத்தை ஒருங்கிணைத்த போராட்டக்குழு தலைவர் டென்சில் நோர்பு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் அருகே தங்கியிருந்த டென்சில்,  தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. மேலும், சென்னையில் உள்ள திபெத்திய நாட்டை சேர்ந்த 60 பேரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11634 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

275 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

115 views

பிற செய்திகள்

வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட மோதல், காவலர் மீதான புகாரை வாங்க மறுப்பு என தகவல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை டிஎஸ்பி இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 views

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

7 views

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார்: சிதறிக் கிடந்த ரூ. 2.78 லட்சம் பறிமுதல்

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 views

இடைத்தேர்தல்: அக்.21 -ல் விடுமுறை அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

6 views

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம், அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

32 views

தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் ஒரே நாளில் 72 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.