"வன்னியர்கள் தூக்கியெறிய கறிவேப்பிலையா?" - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி
பதிவு : அக்டோபர் 08, 2019, 03:28 PM
தேர்தலின் போது தி.மு.க. கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தலின் போது தி.மு.க. கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை ஸ்டாலின்  அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில்  வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சத்தில்,  பொய் வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்து உள்ளார் எனவும் ராமதாஸ் சாடியுள்ளார். வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20 சதவீத இட ஒதுக்கீட்டை, 108 சமூகங்களுக்கு பகிர்ந்து வழங்கி துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11378 views

முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

21 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

21 views

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

16 views

பிற செய்திகள்

இந்திய அளவிலான கராத்தே போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

மேட்டுப்பாளையத்தில், நடைபெற்ற இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று , தங்கள் திறமையை ஆக்ரோஷமாக வெளிக்காட்டினர்.

2 views

கருணாநிதி அருங்காட்சியகத்திற்கு ரூ.1லட்சம் நிதி - ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

4 views

வழக்கில் தொடர்புடைய நபர் இலங்கைக்கு தப்பிக்க உதவி : ராமநாதபுரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சிறையில் அடைப்பு

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2 views

"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.

4 views

வெட்டப்பட்ட மரத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மக்கள்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரத்தை இரவோடு இரவாக மர்மநபர்கள் வெட்டிய நிலையில், அதற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

6 views

"9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.