திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலம் : எட்டாம் நாள் இரவு மலையப்பசாமி வீதியுலா
பதிவு : அக்டோபர் 08, 2019, 02:43 AM
திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவு மலையப்பசுவாமி பாயும் தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாக்கோலம் பூண்டுள்ள திருமலையில் மலையப்ப சாமி  தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருமலையில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் நாள்தோறும் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் காலை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மலையப்ப சாமிக்கு ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் பாயும் தங்க குதிரை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது  பக்தர்கள் பாரம்பரிய உடை அணிந்து கோலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி ஏழுமலையானை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

"என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பீகாரை போல், தமிழக சட்டப் பேரவையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

567 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

280 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

68 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

37 views

அரசுப்பேருந்து - டிராக்டர் மோதி விபத்து : இடிபாடுகளில் சிக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

மணப்பாறை அருகே அரசுப் பேருந்தும், டிராக்டரும் மோதி விபத்திற்குள்ளானது.

14 views

பிற செய்திகள்

முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஓடிஷா மாநிலம் புவனேஷ்வரில் அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

73 views

டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு - பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார்.

12 views

"இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள்" - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

சிஏஏ சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

12 views

"நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

புதுச்சேரியில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

5 views

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

கடலில் வீணாக கலக்கும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்க 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

6 views

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.