தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : 395 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா
பதிவு : அக்டோபர் 06, 2019, 01:46 AM
மாற்றம் : அக்டோபர் 06, 2019, 01:47 AM
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 395 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின்  4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மாயங் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 2வது இன்னிங்சிலும் சதம் விளாசினார். இதன் மூலம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முதல் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். புஜாரா 81 ரன்கள் சேர்க்க இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. டிரா செய்ய தென்னாப்பிரிக்காவும், போட்டியை வெல்ல இந்தியாவும் போராடும் என்பதால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிற செய்திகள்

உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை - செரினாவை பின்னுக்கு தள்ளிய ஜப்பான் வீராங்கனை ஓசாகா

உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றார்.

13 views

கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு தடை - தற்காலிக முடிவு தான் என்று கும்ப்ளே கருத்து

கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமானதே என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

44 views

"பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்" - கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கருத்து

பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

63 views

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்

ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யுமே தவிர பி.சி.சி.ஐ. இல்லை என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார்.

80 views

இந்திய அணியை ஒரு கை பார்ப்போம்" - ஆஸி வீரர் பேட் கம்மின்ஸ் சவால்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியை இம்முறை ஒரு கை பார்ப்போம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

8 views

"டிக் டாக்கிற்கு வாங்க, டூயட் பாடலாம்" - கேப்டன் கோலிக்கு அழைப்பு விடுத்த வார்னர்

டிக்டாக்கில் தினந்தோறும் ஒரு வீடியோவை பதிவிட்டு அசத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய கேப்டன் விராட் கோலியை டிக் டாக்கில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார் .

295 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.