நடிகை நிலானியை போனில் மிரட்டியதாக புகார் : வெளிநாட்டுப் பொறியாளர் கைது
பதிவு : அக்டோபர் 05, 2019, 06:46 PM
சின்னத்திரை நடிகை நிலானியை செல்போனில் மிரட்டிய புகாரில், சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில், சின்னத்திரை நடிகை நிலானி, கணவரை பிரிந்து இரண்டு குழந்தை களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில்  ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை, போலீஸ் உடையில் பேசி, ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே தனது காதலருடன் ஏற்பட்ட மோதலால் தற்கொலைக்கு முயன்று அதில் இருந்தும் நிலானி மீண்டு வந்தார். அதன் பின், வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வரும் வேலூரைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருடன் அவர் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மஞ்சு நாதனுக்கு திருமணமானது தெரிய வந்ததையடுத்து, நிலானி விலகி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த மஞ்சுநாதன், செலவு செய்த பணத்தை திருப்பி தருமாறு, நிலானியை செல்போனில், ஆபாசமாக பேசி தொந்தரவு செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து நிலானி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனிடேயே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மஞ்சுநாதனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11510 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

232 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

68 views

பிற செய்திகள்

கேதார்நாத் கோயிலில் ரஜினி வழிபாடு

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.

7 views

'பிகில்' படத்துக்கு தடை கோரி வழக்கு

'பிகில்' திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

77 views

"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்

நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்

36 views

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து பேசினார்.

251 views

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ஆத்மியா

எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மனம் கொத்தி பறவை' படத்தில் நடித்தவர் ஆத்மியா, 5 ஆண்டுகளுக்கு பிறகு, ஷாம் ஜோடியாக 'காவியன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

30 views

சந்தானத்துடன் இணையும் ஹர்பஜன்சிங்

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார்.

269 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.