நியூட்ரினோ திட்டம் - பிடிகொடுக்காத தமிழகம், கேரளா
பதிவு : அக்டோபர் 05, 2019, 06:11 PM
தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டத்தில், கேரள அரசின் முடிவுக்கு பின்னரே தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டத்தில், கேரள அரசின் முடிவுக்கு பின்னரே தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் காணொலி காட்சி மூலம், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், கேரள தலைமை செயலாளர் பங்கேற்றனர். அப்போது, மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த  மண்டலமாக அறிவிக்க கேரளா வலியுறுத்தியுள்ளது. மேலும், மதிகெட்டான் சோலையை அங்கீகரித்தால் தான், நியூட்ரினோ திட்டத்தில் முடிவெடுப்போம் என்றும் கேரளா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள அரசு ஒரு முடிவை எடுத்த பின்னரே, திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11148 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

140 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

119 views

பிற செய்திகள்

"சீன அதிபருடன் நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சி" - பிரதமர் மோடி புகழாரம்

யுனேஸ்கோவின் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான கவின் மிகு இடத்தை அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து நேரத்தை செலவிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி என மாமல்லபுரம் பயணம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

11 views

சென்னையில் இருந்து கோவளம் செல்கிறார், ஜி ஜின்பிங்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

133 views

சென்னையில் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம்

சென்னையில் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம் வரும் 18 ஆம் தேதி அருணா சாய்ராம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

10 views

மலை ரயில் இன்ஜினை பராமரிக்க ஜிப் கிரேன் வசதி

குன்னூரில் மலை ரயில் இன்ஜின்களை பராமரிப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய 10 டன் கொண்ட ஜிப் கிரேன் வசதி துவங்கப்பட்டுள்ளது.

14 views

சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் மீண்டும் திறப்பு?

நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

9 views

கேரள தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஸ். மணிக்குமார் பதவியேற்று கொண்டார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.