போலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர் கைது
பதிவு : அக்டோபர் 03, 2019, 06:37 PM
திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் தொழில் செய்து வந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த பிரேம்குமார் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்குமார், பிரேம்குமாரிடம் ரூ.28 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்மோகன்குமாரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திமுக பிரமுகர் என்பதும், திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும்,  அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரான பாரதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ராஜ்மோகன்குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் கியூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

280 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

38 views

பிற செய்திகள்

ஜெயலலிதா 72 வது பிறந்த நாள் விழா - அமைச்சர் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

0 views

"ஜெயலலிதா ஆன்மாவால் தான் 18 எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

11 எம்எல்ஏ வழக்கு பிரச்சினை இல்லாமல் முடிந்ததற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

83 views

"15 ஆண்டு கால ஆட்சியில் திமுக செய்தது என்ன?" - அமைச்சர் செல்லூர் ராஜூ

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

9 views

முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஓடிஷா மாநிலம் புவனேஷ்வரில் அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

108 views

"மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி : சைக்கிள்களை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்"

சென்னை போரூரில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

11 views

"சசிகலா உறவினரின், வீட்டை இடிக்கும் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு"

சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தமாக சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.