1000 பள்ளி மாணவர்களுக்கு இலவச குடை : சொந்த பணத்தில் வாங்கி கொடுக்கும் பள்ளி ஆசிரியை
பதிவு : செப்டம்பர் 14, 2019, 03:02 AM
நாகை மாவட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, தன் சொந்த பணத்தில் குடை வழங்க அரசு பள்ளி ஆசிரியை திட்டமிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, தன் சொந்த பணத்தில் குடை வழங்க அரசு பள்ளி ஆசிரியை திட்டமிட்டுள்ளார். இதே கிராமத்தை சேர்ந்த வசந்தா என்ற ஆசிரியை, மழையால் பள்ளி மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த உதவி புரிந்து வருகிறார். இதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு அவர் குடைகள் வாங்கியுள்ளார். நாடிமுத்து தொடக்க பள்ளி மாணவ மாணவியர் 70 க்கும் மேற்பட்டோருக்கு குடை வழங்கி வசந்தா, நாளை 20 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு குடைகள் வழங்கவுள்ளார்.இவரின் இந்த முயற்சியை பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3585 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

366 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

331 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

2 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.