வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - 9 பேர் பட்டியலை அனுப்பியது விளையாட்டு அமைச்சகம்
பதிவு : செப்டம்பர் 12, 2019, 01:45 PM
வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை, மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத்  துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை, மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டு அமைச்சக பரிந்துரையில் 9 பேரும் பெண்கள் என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் நாட்டை பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மகளிரை கவுரவிக்கும் விதமாக இந்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மேரிகோம், பி.வி.சிந்து, வினேஷ் போகட், மாணிக் பத்ரா,  ஹர்மான் பிரீத் கவுர், ராணி ராம்பால், சுமா ஷீரூர்,  டேஷி,  நுங்குஷி மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பத்ம விருதுக்கு தேர்வானவர்கள் விவரத்தை அடுத்தாண்டு ஜனவரி 25 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் அறிவிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

"பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்"

'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

1752 views

ஹவுஸ்புல் - (06/07/2019)

ஹவுஸ்புல் - (06/07/2019)

173 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

94 views

பிற செய்திகள்

சீன அதிபர்- பிரதமர் மோடி அக்டோபர் 11-ந்தேதி வருகை : மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

0 views

அமெரிக்காவில் 'ஹவுடி மோடி' வரவேற்பு நிகழ்ச்சி : களைகட்டிய வரவேற்பு கலை நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள ​​ஹுஸ்டன் நகரில் நடைபெறும் 'ஹவ்டி மோடி' என்ற விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவானாது, கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது

62 views

இளைஞரின் உயிரை பறித்த டிக்-டாக் மோகம் - நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு

தெலங்கானாவில் டிக்டாக் மோகத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

523 views

உலக அரங்கில் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம்

உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.

68 views

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருது - இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

31 views

இயற்கை பெருமாளுக்கு 1000 கிலோ பூ மாலை - 2000 அடி உயர சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பதி திருமலை நாராயணகிரி மலையில் 2000 அடி உயரத்தில் உள்ள இயற்கை பெருமாளுக்கு கடும் மழையிலும் ஆயிரம் கிலோ பூக்களால் செய்யப்பட்ட குடமாலை அணிவித்து இளைஞர்கள் வழிபட்டனர்.

4578 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.