பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்
பதிவு : செப்டம்பர் 11, 2019, 07:52 AM
தஞ்சையில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளிமான்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பிரிவை தாங்க முடியாமல் அதனை பராமரித்த ஊழியர்கள் கலங்கித் தவித்தனர்.
தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை பூங்கா மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தஞ்சைக்கு சுற்றுலா வருவோர் இங்குள்ள சிவகங்கை பூங்காவையும் பார்த்து செல்வது வழக்கம். 

இந்த பூங்காவில் முயல், மான், நரி, புறா, சீமைஎலி, மயில், பூனை, கிளி, குரங்கு, மரநாய், முள்ளம்பன்றி உள்ளிட்ட விலங்குகளும் பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இங்கு படகு, தொங்கு பாலம், நீர்ச்சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு திரும்ப செல்வதை பார்க்க முடியும். 

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்  8 கோடியே 10லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட உள்ளது. இதனால் இந்த பூங்காவில் உள்ள 8 ஆண் மான்கள் உட்பட 41 புள்ளி மான்களை கோடியக்கரை வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்கள், தற்போது வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் அதனை பராமரித்து வந்த ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இங்கிருந்த மான்கள் அனைத்தும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு கோடியக்கரை வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் புள்ளிமான்களை குழந்தைகள் போல பராமரித்து வந்தவர்கள் கண்ணீருடன் அதனை வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3574 views

பிற செய்திகள்

மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - வைகோ விளக்கம்

தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

42 views

தேர்வு கட்டண உயர்வு : அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுட்டனர்.

23 views

இன்று தி.மு.க. உதயமான நாள் - "இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க."- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்

இன்று தி.மு.க. உதயமான நாள் - "இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க."- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்

20 views

பெரியார் பிறந்த நாள் - பினரயி விஜயன் தமிழில் பதிவு

பெரியார் பிறந்த நாளையொட்டி, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

45 views

காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு -பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்- விழாவில் குருவின் மகன் கனல் அரசன் பங்கேற்பு

காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு -பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்- விழாவில் குருவின் மகன் கனல் அரசன் பங்கேற்பு

60 views

சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை அகற்ற உத்தரவு

உலக பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகிற அகடோபர்-11-ந்தேதி சீனஅதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வருகை தர உள்ளனர்.

1747 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.