காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு : சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2019, 03:18 AM
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தொடர்பான உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 - 16 ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை எனவும், வருமானத்தை மறைத்ததாகவும் கூறி, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த 2018 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், சிவகங்கை தொகுதி எம்.பி.,யாக கார்த்தி சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை  எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு மாற்றம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டதாகவும், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏதும் வழங்கப்படவில்லை எனவும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யும்படி, அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆதிகேசவலு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

330 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

224 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 589 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

17 views

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உடல்நலக்குறைவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

26 views

சென்னையில் என்.ஐ.ஏ., கிளை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

12 views

ரூ.38 ஆயிரத்துக்கும் குறைந்தது தங்கம் - ஒரு கிராம் தங்கம் ரூ.4740-க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது.

8 views

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

16 views

உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பு - சிந்தாமணி சுங்கசாவடியை முற்றுகையிட்ட பாஜகவினர்

மதுரை மாவட்டம் சிந்தாமணியில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வ‌சூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.