துபாய் சென்றார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : செப்டம்பர் 09, 2019, 04:38 AM
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, துபாய் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என 3 நாடுகள் பயணமாக கடந்த 28ஆம் தேதியன்று முதலமைச்சர் பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். முதலில் இங்கிலாந்து பயணத்தை முடித்த அவர், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ, நியுயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள கழிவு நீரை மறு சுழற்சியாக்கும் நிறுவனத்தை பார்வையிட்டார். வீடுகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்தமாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பும் முறையை, அவருக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.  இதையடுத்து, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து துபாய் சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று துபாயில் உள்ள தொழிலதிபர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். 
இரண்டு வார கால வெளிநாடு சுற்றுப் பயணத்துக்கு பிறகு, 10ஆம் தேதி அதிகாலை 2.40 மணி அளவில் சென்னைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3841 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

447 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

354 views

பிற செய்திகள்

ரூ. 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 8 கடைகளை, அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து, அப்புறப்படுத்தினர்.

1 views

3- வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

வேலை நிறுத்தத்தால், துறைமுகங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், 35 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

2 views

"மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் செயல்பட தடை : மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"

மதுரை ஆவின் தலைவராக அ.தி.மு.க முன்னாள் MLA தமிழரசன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பின்பற்றவில்லை என்றால் ,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

10 views

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.