மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மரணம் - அரசியல் தலைவர்கள் இரங்கல்
பதிவு : செப்டம்பர் 08, 2019, 12:48 PM
மாற்றம் : செப்டம்பர் 08, 2019, 05:16 PM
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி காலமானர்.
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி காலமானர். அவருக்கு வயது 95. 

ராம்ஜெத்மலானி நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள அவரது வீட்டிலேயே ராம்ஜெத்மலானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு 24 மணி நேர கண்காணிப்பில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ராம்ஜெத்மலானி இன்று காலமானார். அவருக்கு  வயது 95.  ராம்ஜெத்மலானியின் உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

குடியரசு தலைவர்  இரங்கல் :

ராம்ஜெத்மலானி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த சட்ட நிபுணரை நாடு இழந்து விட்டதாக குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இரங்கல் :

ராம்ஜெத்மலானி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த வழக்கறிஞரும், முக்கிய  நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்ஜெத்மலானியை நாடு இழந்து விட்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்திலும், நீதிமன்றங்களிலும் ராம்ஜெத்மலானி சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலை காலத்தில் மனதில் பட்டதை தைரியமாக பேசியவர் ராம் ஜெத்மலானி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

வெங்கய்யா நாயுடு அஞ்சலி :

டெல்லியில் உள்ள ராம்ஜெத்மலானியின் வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தி குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, ராம்ஜெத்மலானியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதேபோல், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங்,  உள்ளிட்டோரும் ராம்ஜெத்மலானி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 ஸ்டாலின் இரங்கல் :

ராம்ஜெத்மலானியின் மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல்வேறு நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முன் வைத்து, வழக்கறிஞர் தொழிலில் பவள விழா கண்டவர், என புகழாரம் சூட்டி உள்ளார். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றிய ராம்ஜெத்மலானியின் மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி நாட்டிற்கும் பேரிழப்பு என ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வைகோ இரங்கல் :

ராம்ஜெத்மலானி மறைவுக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். ராம்ஜெத்மலானிக்கு நிகரான வழக்கறிஞர் இந்தியாவில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள வைகோ, ராம்ஜெத்மலானி கம்பீர குரலில் வாதங்களை எடுத்துரைக்கும் போது நீதிபதிகள் திகைப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தலைசிறந்த எழுத்தாளராக விளங்கிய ராம்ஜெத்மலானியின் நினைவுகள், தம் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். 

ராமதாஸ் இரங்கல் :

ராம்ஜெத்மலானி மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சட்டத்துறை மற்றும் அரசியல் வரலாற்றை  ராம்ஜெத்மலானியை தவிர்த்து விட்டு எழுதி விட முடியாது என்று 
அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.  ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இலவசமாக நடத்தி கொடுத்த  பெருமை ராம்ஜெத்மலானிக்கு  உண்டு 
என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3860 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

453 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

356 views

பிற செய்திகள்

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

10 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

173 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

174 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.