கற்பு குறித்த திருமாவளவன் கருத்தால் விவாதம்
பதிவு : செப்டம்பர் 08, 2019, 11:03 AM
கற்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்து விவாத பொருளாக மாறியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய திருமாவளவன்,  கற்பு என்பதன் பொருள் உறுதியாக இருத்தல் என்று தெரிவித்துள்ளார். கற்பு என்ற ஒற்றை வார்த்தை ஆணாதிக்கத்திற்கு பயன்படுத்தப் படுவதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.

நாகரீகம் எப்போது தோன்றியது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அது குறித்து பல வினாக்களை தொடுத்துள்ளார்.  கற்பு என்பது கால போக்கில் மக்களாக உருவாக்கி கொண்டதுதான் என்றும் திருமாவளவன் விவரித்துள்ளார்.

இதனிடையே, கற்பு என்ற சொல் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்பிடப் படவில்லை என்றும் அவ்வப்போது நீதிமன்றங்களால், வழக்குக்கேற்ப புதிய  புதிய விளக்கங்கள் தரப்படுகின்றன என்றும் வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

திருமாவளவனின் இந்த கருத்து விவாத பொருளாகி உள்ள நிலையில், கற்பு குறித்து சங்க இலக்கியங்களிலும் , நவீன இலக்கியங்களிலும், தெரிவித்துள்ள கருத்துகளை பார்ப்போம். 

கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை என்று  கொன்றைவேந்தனில் அவ்வையார் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சொன்ன சொல் மாறாமல் இருப்பது தான் கற்பு என்றும் , அது உடல் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல என்றும் அவ்வையார் கூறியுள்ளார். 

கற்பு விஷயத்தில் பாரதியாரின் கருத்து முற்றிலும் மாறுபட்டது. பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பாரதியார், கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்று கூறியுள்ளார் 

இன்றும் கற்பு என்ற சொல் தமிழ் இலக்கிய மேடைகளில் விவாத பொருளாகவே இருந்து வருகிறது
 தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3880 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

455 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

356 views

பிற செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது

மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

37 views

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார்.

12 views

திமுக எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு : தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

5 views

"எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு - செப். 23 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு"

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் விசாரணை வருகிற 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

6 views

"குடிநீரை சேமிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : ஏரி,குளங்களை தூர்வார நடவடிக்கை"

வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கக்கூடிய நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.