கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் குறித்த கருத்து - அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 05, 2019, 01:15 AM
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த கருத்தை நீக்க கோரிய விவகாரத்தில் 23 வழக்கறிஞர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவதாக தீர்ப்பு ஒன்றில், நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, பெண்கள் மற்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை இனி நீதிபதி வைத்தியநாதன் விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், 64 வழக்கறிஞர்கள் புகார் அளித்திருந்தனர்.

நீதிபதி வைத்தியநாதன் மட்டுமல்லாமல் நீதிபதி கிருபாகரனும் இதேபோல வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கருத்துகளை நீதிபதி வைத்தியநாதன் நீக்கினார்.

இந்நிலையில், வழக்கறிஞர்களின் இந்த செயலை நீதிமன்ற அவமதிப்பாக கருதி 23 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம்,  வழக்கறிஞர்கள் செளந்தரராஜன், ராமமூர்த்தி, பாபு, அஸ்வதாமன் ஆகியோர் மனு அளித்துள்ளார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு : சிறப்பாக துப்பு துலக்கிய பொன். மாணிக்கவேல்...

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், ஐஜி பொன் மாணிக்கவேலின் சிறப்பு புலன் விசாரணையால், சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

1465 views

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிடப் மாற்றத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

26 views

கோயில் ஊழியர்கள் சம்பளம் தொடர்பான வழக்கு : இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு மதுரை கிளை நோட்டீஸ்

அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் ஊழியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

12 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

1 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.