எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு : தேர்தல் ஆணையம், கனிமொழி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 06:32 PM
தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழி ஆகியோருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், கனிமொழியின் வேட்புமனு படிவத்தில், சிங்கப்பூர் பிரஜையான அவரது கணவர் அரவிந்தனின் வருமானத்தை பற்றி குறிப்பிடவில்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது என்பதால், கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு

இளநிலை மருத்துவ படிப்பில் இறுதியாண்டில் NEET தேர்வு நடத்த வகை செய்யும் தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

171 views

வேலூர் மக்களவை தொகுதியை முற்றுகையிட்ட அமைச்சர்கள் - அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம்

கட்சிக்கு வந்துள்ள சோதனையில் இருந்து வெற்றி பெறவே அமைச்சர்கள் வேலூர் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.

158 views

எட்டுவழிச் சாலை திட்டம் மக்கள் நலனுக்கான திட்டம் அல்ல - அழகிரி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் உள்ள ஏரியை தூர்வாரும் பணியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தொடங்கி வைத்தார்.

23 views

பிற செய்திகள்

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

143 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

155 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

6 views

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

9 views

திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.