"சென்னை - விளாடிவோஸ்டோக் இடையே கப்பல் போக்குவரத்து" : இந்தியா - ரஷ்யா இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்து
பதிவு : செப்டம்பர் 04, 2019, 06:24 PM
சென்னை மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரங்களுக்கு இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் 25 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ரஷ்யாவுடனான இந்திய உறவு காலம்காலமாக வலுப்படுத்தப்பட்ட ஒன்று என்றார். புதின் தனது மிக சிறந்த நண்பர் என குறிப்பிட்ட மோடி, இரு நாடுகளின் உறவு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டது என தெரிவித்தார். ரஷ்ய உதவியுடன் விண்வெளியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டும் என குறிப்பிட்ட மோடி, இருநாடுகளும் இணைந்து ஏ.கே. 203 ரக அதிநவீன துப்பாக்கிகளை தயாரிக்கும் என கூறினார். மேலும், சென்னை மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரங்களுக்கு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

77 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

28 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.