மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி மனு : 6 வாரங்களில் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 03:29 PM
மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகளை செய்து கோரிய மனு மீது, 6 வாரங்களில் நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்க கோரியும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்த தர உத்தரவிடக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கிட்டு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனுவில் கோரிக்கைகள் குறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு, அடிப்படை வசதிகள் செய்து தராதது ஏன் என ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கை மனு மீது 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மாமல்லபுரத்தில் அடுத்த வாரம் முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளதால் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

பிற செய்திகள்

கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

சென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.

87 views

மதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

449 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா"

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

35 views

"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

41 views

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

23 views

"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்

நாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.

1095 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.